பக்கம்:சங்க கால மகளிர்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16


பாவைப் பொம்மைக்குப் பால் வாராத முலைகொண்டு பாலூட்டுகின்றாள் ஒரு பெண்.

உறாஅ வறுமுலை மடாஅ

உண்ணாப் பாவையை யூட்டு வோளே.[1]

செந்நிறக் கோடுகளிட்டு அழகாகச் செய்த செப்புக்களும் பொம்மைகளும் கொண்டு சிற்றில் கட்டி விளையாடுகிறாள் தலைவி:

சுடர்விரி வினைவாய்ந்த தூதையும் பாவையும்

விளையாட.[2]

அடுத்து, தன்னோடொத்த இளைய மகளிர் சூழ, வகை வகையாக அணி புனைந்து, தைத்திங்களில் நல்ல கணவனையடையவேண்டித் தவத்தலைப் படுகிறாள்.

வையெயிற் றவர் நாப்பண் வகையணி பொலிந்துநீ

தையில் நீராடிய தவங்தலைப் படுவாயே.[3]

விளையாட்டு மாறாத நிலையில், பிறர் மனைகள் தோறும் சென்று பாடிக் கிடைத்ததைப் பலருக்கும் கொடுத்து நோன்பியற்றுகின்றாள்;

பொய்தல மகளையாய்ப் பிறர்மனைப் பாடிநீ
எய்திய பலர்க்கீத்த பயம்பயக் கிற்பதோ
சிறுமுத்தனைப் பேணிச் சிறுசோறு படுத்து நீ

நறுநுத லவரொடு நக்கது நன்கியைவதோ.[4]

இவையெல்லாம் சின்னஞ்சிறு பருவ விளையாட்டுக்களாகும்.


  1. ஐங்குறுநூறு: 128: 2-3
  2. குறிஞ்சிக்கலி: 23: 5-6
  3. குறிஞ்சிக்கலி: 23: 12-13
  4. குறிஞ்சிக்கலி: 23: 16-17; 20-21