பக்கம்:சங்க கால மகளிர்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

படுவர் என்பது மகளிர்தம் மாண்புறு இசைக்கு மற்றுமொரு சான்றாகும்.

ஆறலை கள்வர் படைவிட அருளின்

மாறுதலை பெயர்க்கும் மருவின் பாலை.[1]

போரிற் புண்பட்ட தம் கணவரது நோயினைத் தாம் பயின்ற இன்னிசையாகிய மருந்தினால் மகளிர் தணிவித்த செய்தி புறப்பாடல் ஒன்றிற் குறிப்பிடப்பட்டுள்ளது.

தீங்கனி யிரவமொடு வேம்புமனைச் செரீஇ
வாங்குமருப் பியாழொடு பல்லியங் கறங்கக்
கைபயப் பெயர்த்து மையிழு திழுகி
ஐயவி சிதறி யாம்ப லூதி
இசைமணி யெறிந்து காஞ்சி பாடி
நெடுநகர் வரைப்பிற் கடிகறை புகைஇக்
காக்கம் வம்மோ காதலங் தோழீ
வேந்துறு விழுமங் தாங்கிய

பூம்பொறிக் கழற்கா னெடுங்தகை புண்ணே.[2]

பத்துப்பாட்டுள் ஒன்றான மலைபடுகடாத்திலும், மகளிர் தம் கணவர் போர்க்களத்தில் உற்ற புண்களின் நோய்க் கொடுமையைத் தணிக்கப் பாட்டிசைத்த செய்தி பேசப்படுகின்றது.

கொழுநர் மார்பின்,
நெடுவசி விழுப்புண் டணிமார் காப்பென

வறல்வாழ் கூந்தற் கொடிச்சியர் பாடல். [3]

  1. பொருநராற்றுப்படை: 21-22.
  2. புறநானூறு: 281.
  3. மலைபடுகடாம்: 302: 304.

ச. ம.– 2