பக்கம்:சங்க கால மகளிர்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

கற்பெனப் படுவது காணமொடு புணரக்
கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக்

கொடைக்குரி மரபினோர் கொடுக்கக் கொள்வதுவே. [1]

இவ்வாறின்றித் தலைவியின் பெற்றோர் திருமணத்தில் தலைவனுக்குத் தர உடன்படாதபோது தலைவியோடு உடன் போக்கு (elopement) ஒருப்பட்டுத் தலைவன் வேற்றூர். சென்று தலைவியை மணந்து கொள்வன் என்பதனையும் தொல்காப்பியனார் குறிப்பிட்டுள்ளார்.

கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே

புணர்ந்துடன் போகிய காலை யான.[2]

ஆயினுங் காலப்போக்கில் பொய் கூறுதலும் வழுப்பட வொழுகலும் தோன்றிய பின்னர்ச் சமுதாயப் பெரியோர்கள் ‘கரணம்’ எனும் சடங்கினைப் புகுத்தினர் எனத் தொல்காப்பியனார் குறிப்பிடுகின்றார்.

பொய்யும் வழுவுங் தோன்றிய பின்னர்

ஐயர் யாத்தனர் கரணம் என்ப.[3]

இந்நூற்பாவிற்கு (Sutra) இளம்பூரணர் பின்வருமாறு உரை விளக்கம் கூறியுள்ளார்:

இரண்டும் (பொய்யும் வழுவும்) தோன்றுவது இரண்டாம் ஊழியின் கண்ணாதலின், முதலுாழியிற் கரணமின்றியே இல்வாழ்க்கை நடந்ததென்பதூஉம், இவை தோன்றிய பின்னர்க் கரணந் தோன்றின. தென்பதூஉம் கூறியவாறாயிற்று. பொய்யாவது செய்ததனை மறைத்தல். வழுவா


  1. தொல்காப்பியம்: கற்பியல்: 1
  2. தொல்காப்பியம்: கற்பியல்: 2.
  3. தொல்காப்பியம்: கற்பியல்: 4.