பக்கம்:சங்க கால மகளிர்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

காலை யெழுந்து கடுந்தேர் பண்ணி
வாலிழை மகளிர்த் தழீஇய சென்ற
மல்லல் ஊரன் எல்லினன் பெரிதென
மறுவருஞ் சிறுவன் தாயே

தெறுவ தம்மவித் திணைப்பிறத் தல்லே.[1]

இத்தகு பெருமை வாய்ந்த தலைவி, தான் சாவதற்கு அஞ்சவில்லை என்றும், ஆனால் இறந்துபட்டால் தலைவனோடுகூடி வாழும் இப்பிறப்பு மாறிவிடும் என்று தான் வருந்துவதாகக் கூறுகின்றாள்:

சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவில்
பிறப்புப் பிறிதா குவது ஆயின்

மறக்குவென் கொல்என் காதலன் எனவே.[2]

இந்தப் பிறவியில் மட்டுமின்றி மறுபிறவியிலும் இவரே தன் நெஞ்சுநிறைந்த கணவராக அமையவேண்டும் என்று தலைவி ஒருத்தி வேண்டிக் கொள்கிறாள்:

இம்மை மாறி மறுமை யாயினும்
நீயா கியரென் கணவனை

யானா கியர்நின் நெஞ்சுநேர் பவளே.[3]

இதுபோன்றே கண்ணகியும் கோவலன் தன்னைவிட்டுப் பிரிந்தபொழுது ஆற்றியிருந்து, பின்னர்த் தன்னை வந்தடைந்து கழிந்துபோன செயல்களுக்கு வருந்தி நின்ற பொழுது, “நீங்கள் சான்றோர் போற்றாத ஒழுக்கத்தை மேற்கொண்டீர்கள்; ஆனால் நான் மாறாத நிலைகுலையாத நெஞ்சத்தவளாதலின் நீங்கள் மதுரை செல்ல வேண்டும்


  1. குறுந்தொகை: 45
  2. நற்றிணை 387: 7-9.
  3. குறுந்தொகை: 49: 3-5;