பக்கம்:சங்க கால மகளிர்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

கொழுவிய சோற்றினை அனுப்பி வைக்கவும்,அதனை ஏற்றுக் கொள்ள மறுத்துத் திருப்பியனுப்பிவிட்டு ஒருபொழுது விட்டு ஒரு பொழுது உண்ணுகின்றாள் என்ற செய்தியினை நற்றிணைப்பாடல் ஒன்றில் புலவர் போதனார் குறிப்பிடுகின்றார்:

பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால்
விரிகதிர்ப் பொற்கலங்து ஒருகை ஏந்திப்
புடைப்பில் சுற்றும் பூந்தலைச் சிறுகோல்
உண்ணென்று ஓக்குபு புடைப்பத் தெண்ணீர்
முத்தரிப் பொன்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று
அரிநரைக் கூந்தல் செம்முது செவிலியர்
பரிமெலிந் தொழியப் பந்தர் ஓடி
ஏவல் மறுக்குஞ் சிறுவிளை யாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந் தனள்கொல்
கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக்
கொடுத்த தங்தை கொழுஞ்சோறு உள்ளாள்
ஒழுகுநீர் நுணங்கறல் போலப்

பொழுது மறுத்து உண்ணும் சிறுமது கையளே.[1]

இங்குக் குறிப்பிடப்பெற்ற சங்ககால மகளிரின் இச்சீரிய பண்பு நினைத்தொறும் நினைத்தொறும் வியக்கத்தகும் அரிய பண்பாவதோடு, மகளிர் பண்பாட்டின் ஒர் உயிர் நிலைப் பண்பு என்றும் கொள்ளத்தக்கதாகும்.

இதுபோன்றே பிறிதொரு காதல் தலைவி, தன் தாய் வீட்டுத் தோட்டத்திலுள்ள தேன்கலந்த பாலைக் காட்டிலும் தலைவன் நாட்டிலுள்ள தழையுடைய கிணற்றின் அடியிலுள்ள மான் முதலிய விலங்குகள் உண்டு எஞ்சி மிகுந்த கலங்கல் நீரே இனிமையுடையது என்று துணிகின்றாள்:


  1. நற்றிணை: 110.