பக்கம்:சங்க கால மகளிர்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

தாயுடன் றலைக்குங் காலையும் வாய்விட்டு
அனனா வென்னுங் குழவி போல
இன்னா செயினும் இனிதுதலை யளிப்பினும்
நின்வரைப் பினள் என் தோழி

தன்னுறு விழுமங் களைளுரோ விலளே.[1]

"

இதனால்தான் பெருங்கதை ஆசிரியர் கொங்குவேளிரும் தம் காப்பியத்தில் ‘அன்பான கணவர் அழியும் வண்ணம் தலைவிக்குத் துன்பம் தந்தாலும் அதனைப் பொறுத்துப் போவதென்பதே பெண்ணாகப் பிறந்துவிட்ட மனைவியின் பெருமையாக அமைவது பொறுத்துப் போவதாகிய பண்பே’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அன்புடைக் கணவர் அழிதகச் செயினும்

பெண்பிறந் தோர்க்குப் பொறையே பெருமை.[2]

பிற்காலச் சோழர் காலத்தில் வாழ்ந்து, கவிதையுலகில் என்றும் நிலைத்துவாழும் சுந்தரமாம் ஒரு காப்பியத்தைத் தந்த கம்பநாடர் தாம் இயற்றிய இராமாயணத்தில் தம் காவிய நாயகியாம் சீதையின் பண்புகளைக் குறிப்பிடப் போந்தபொழுது, சீதை உயர்ந்த குடிப்பிறப்பின் உறைவிடமாகவும், பொறுமையின் நிலைக்களமாகவும், கற்பிற்கோர் அணிகலனாகவும் இலங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

விற்பெருங் தடங்தோள்வீர வீங்குநீர் இலங்கைவெற்பில்
நற்பெருங் தவத்தளாய நங்கையைக் கண்டேன் அல்லேன்
இற்பிறப்பு என்ப தொன்றும் இரும்பொறை என்ப தொன்றும்

கற்பெனும் பெயர தொன்றும் களிங்டம் புரியக் கண்டேன்.[3]

  1. குறுந்தொகை: 397: 4-8.
  2. பெருங்கதை: 4: 14: 98-99.
  3. கம்பராமாயணம்: சுந்தரகாண்டம்: திருவடி தொழுதபடலம்: 29