பக்கம்:சங்க கால மகளிர்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39


பிற்கால ஒளவையாரும் மனவிை தாயைப் போன்ற பேரன்பும், வேலைகாரி போன்று செயலாற்றும் திறமும், திருமகள் போன்று அழகும், பொதுமகள் போன்று இன்பம் நல்கும் பெற்றியும், பூமியைப் போன்று பொறுக்கும் பண்பும், அமைச்சர் போன்று மதிநலமும் கொண்டு விளங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அன்னை தயையும் அடியாள் பணி யுமலர்ப்
பொன்னின் அழகும் புவிப்பொறையும்–வண்ணமுறும்
வேசி துயிலும் விறன்மங் திரிமதியும்

பேசில் இவையுடையாள் பெண்.[1]

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான நாலடியாரும் அழகு மாட்சியினையும், காதலன் கருத்தறிந்து நடக்கும் தகவினையும், அச்சமும் நானும் கொண்டு, ஊடலும் கூடலுங் கொள்ளும் நேரமறியும் திறமும் கற்புடைப் பெண் டிர்மாட்டு அமைய வேண்டிய பண்புகள் என்று குறிப்பிடுகின்றது.

கட்கிணியாள் காதலன் காதல் வகைபுனைவாள்
உட்குடையாள் ஊர்நாண் இயல்பினாள் உட்கி
இடனறிந்து ஊடி இனிதின் உணரும்

மடமொழி மாதராள் பெண்.[2]

இதுகாறும் கூறப்பட்டவை மகளிர் பொறுமை பற்றிய பல்வேறு புலவர்களின் கருத்துரைகளாகும்.

நிறை:

நிறை என்பதற்கு, “மறைபுலப்படாமை நிறுக்கும் நெஞ்சுடைமை” என்று உச்சி மேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர் பொருள் விரித்துள்ளார்.[3]


  1. தனிப்பாடற்றிரட்டு II; பக்கம் 389
  2. நாலடியார்: 384.
  3. தொல்: கற்பியல்: 11 நூற்பாவுரை.