பக்கம்:சங்க கால மகளிர்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40


எத்தகைய இன்னல்கள் வாழ்வில் வந்துற்றாலும் தன் நெஞ்சிற் கொண்ட துன்பத்தினை வெளியே பிறர் அறியப் புலப்படுத்தாமல் தன் நெஞ்சிற்குள்ளேயே நிறுத்திக் கொள்ளும் அரிய பண்பினைப் பொறை எனப் பழந் தமிழர் கொண்டனர்.

தலைவனது பரத்தைமையாகிய கொடுமையால் தலைவி துன்புறுகின்றாளாயினும், தலைவி தலைவன் செய்த குற்றத்திற்குத் தான் நாணப்பட்டு, தனக்கு உயிருக்குயிராக விளங்கும் தோழிக்குக்கூட அறிவிக்காமல் மறைத்துக் கற்பொழுக்கத்திற் சிறப்புற்றிருக்கின்றாள்.

யாயா கியளே மாஅ யோளே
மடைமாண் செப்பிற் றமியம் வைகிய
பெய்யாப் பூவின் மெய்சா யினளே
தண்ணங் துறைவன் கொடுமை

நம்முள் காணிக் கரப்பா டும்மே.[1]

“தலைவன் பரத்தை வீடு சென்று திரும்பினான். அவன் ஏற்றுக்கொள்ளத் தகாத கொடுமையை யுடையனாயினும், அதனை மனங்கொள்ளாமல், கற்பொழுக்கத்தின் சிறப்பினால் தலைவன் கொடுமையை மறைத்து, அவன் நாணும்படி தலைவி தானே அவனை ஏற்றுக் கொள்ள முன் வருகின்றாள்” என்று தலைவியின் குடும்பப் பண்பாட்டினைத் தோழி வியப்புடன் பேசுகின்றாள்:

யாயா கியளே விழவுமுத லாட்டி
... ... ... ...
காஞ்சி யூரன் கொடுமை

கரந்தன ளாகலின் நாணிய வருமே.[2]

  1. குறுந்தொகை: 9.
  2. குறுந்தொகை: 10.