பக்கம்:சங்க கால மகளிர்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45


காவியக் கம்பரும்,

அருந்தும் மெல்லடகு யாரிட
அருந்து மோவென வழுங்கும்.[1]


என்று சீதை தான் தன் கணவனுக்கு வாய்க்கு ருசியாக அவன் விரும்பும்படி சமைத்துப் போட முடியாமல் தான் அசோகவனத்தில் சிறையிருக்க வேண்டி நேரிட்டுவிட்டதே என வருந்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமுதிற்கு மாறாகிய நஞ்சை நுகரினும், தலைவி கையால் நீண்டின பொருள் தனக்கு உறுதியைத் தருதலின், தேவர்களுடைய அமிர்தத்தையொக்கும் எனக்கு என்று, தலைவன் புனைந்துரைத்து, இதற்குக் காரணம் கூறுவாயாக என்று அடிசிலும் (உணவும்) பூவுந் தலைவி தொடுத்தற்கமைந்த நிலையினைப் பாராட்டி மொழிவான் என்று தொல்காப்பியனார் கூறுவர்:


ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது
வானோர் அமுதம் புரையுமால் எமக்கென
அடிசிலும் பூவும் தொடுத்தற் கண்ணும்.[2]


திருமணம் முடிந்த இல்லறத்தின் தலைவாயிலில் இருவ ரும் நுழைந்து மனைவாழ்க்கை மேற்கொண்டொழுகிய பொழுது ஒருநாள் மனைவி வேப்பங்காயினை முன்பு தந்தால் இனிய பொலிவு பெற்ற வெல்லக்கட்டி என்று பாராட்டிக் கூறியதாகத் தோழி தலைவனிடத்தே பிற்றைநாளிற் கூறினாள்:


வேம்பின் பைங்காயென் தோழி தரினே
தேங்பூங் கட்டி யென்றனிர்.[3]


  1. 108. கம்பராமாயணம்; சுந்தரகாண்டம்: காட்சிப்படலம்: 5:1
  2. 109. தொல்காப்பியம்: கற்பியல்: 5.
  3. 110. குறுந்தொகை: 196: 1-2.