பக்கம்:சங்க கால மகளிர்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48


வர் முன் காளைபோல் நடக்கும்பெருமித நடை' இல்லை என்பர்.

புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.[1]


மேலும் அவர், 'மனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன?'[2]என்றும், மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம்'[3]என்றும் குறிப்பிடுவார்.

"வாழ்வின் ஏற்றத்தாழ்வால் ஒவ்வொரு சமயம் ஒரு துண்டு ஆடையே உடுப்பவராக வறுமையுற்று வாழ்ந்தாலும் அதனைப் பற்றிக் கவலையுறாது, மனம் ஒன்றுபட்டுக் கலந்து வாழ்பவரின் வாழ்க்கையே சிறந்த இன்ப வாழ்க்கை' என்று 'கற்றறிந்தார் ஏத்தும்' கலித்தொகைப் பாடல் ஒன்று கூறும்:

....................................ஒரோ ஒகை
ஒன்றன் கூறாடை உடுப்பவரே ஆயினும்
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை.'[4]

இவ்வாறு இருதலைப்புள்ளின் ஒருயிர்' [5]ஆக மனம் ஒத்து வாழும் கணவன் மனைவியர் இன்ப வாழ்வு சங்க இலக்கியங்களில் யாண்டும் பேசப்படுகின்றது.


  1. 117. திருக்குறள்: 659.
  2. 118. இல்லதென் இல்லவள் மாண்பானால் ' -திருக்குறள்: 52.
  3. 119. 'மங்கலம் என்ப மனைமாட்சி' -திருக்குறள்: 60.
  4. 120. பாலைக்கலி: 18:9-11.

  5. 121. அகநானூறு 12:5.