பக்கம்:சங்க கால மகளிர்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49

49

கடவுள் வாழ்த்து:

சங்ககாலத்தில் திருமணமாகாத மகளிர் திருப்பரங்குன் றம் சென்று, முருகவேளை வணங்கி 'யாம் எம் நெஞ்ச மர்ந்த காதலரைக் கனவிற் கூடியுள்ளோம். அது பொய்யா காமல் நனவின் கண்ணும் யாங்கள் இருவரும் திருமணத்தில் கூடவேண்டும்' என்று இறைஞ்சுகின்றனர். மணமான மகளிர், தங்கட்கு நல்ல குழந்தைகள் பிறக்க வேண்டும் என நோற்கின்றனர். மேலும் தங்கள் கணவர் மேற்கொண்ட செயல்கள் செம்மை பெறவும், மேற்கொண்ட போரில் வெற்றி வந்தெய்த வரம் அருளவேண்டும் என்றும் வேண்டிக் கொள்கின்றனர்;

அருவரைச் சேராத் தொழுநர் கனவிற் றொட்டது கைபிழை யாகாது கனவிற் சேஎப்ப நின் னளிபுனல் வையை வருபுன லணிகென வரங்கொள் வோரும் கருவயி றுறுகெனக் கடம்படு வோரும் செய்பொருள் வாய்க்கெனச் செவிசார்த்து வோரும் ஐயம ரடுகென வருச்சிப் போரும்.'

மணமான மகளிர் சிவபெருமான், மாயோன், முருகன் முதலாய தெய்வங்களை வழிபட்ட செய்தி கிளத்தப்பட் டுள்ளது. தாமரைப்பூவினைக் கையிலே பிடித்தாற் போலத் தாம்பெற்றெடுத்த அருமைக் குழந்தைகளைக் கையினால் தழுவியெடுத்துக்கொண்டு, தம் கணவருடன் பூசனைக்குரிய பூவினையும் நறும்புகையினையும் எடுத்துக் கொண்டு திருக் கோயில்களுக்குச் சென்றனர் என்று மதுரைக் காஞ்சி குறிப்பிடுகின்றது:

-

122. பரிபாடல்: 8, 102-10 8.