பக்கம்:சங்க கால மகளிர்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

50

திண்கதிர் மதாணி ஒண்குறு மாக்களை ஓம்பினர்த் தழீஇத் தாம்புணர்ந்து முயங்கித் தாதணி தாமரைப் போதுபிடித் தாங்குத் தாமும் அவரும் ஒராங்கு விளங்கக் காமர் கவினிய பேரிளம் பெண்டிர் பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சிச் சிறந்துபுறங் காக்கும் கடவுட் பள்ளி.123'

சங்ககால மகளிர் தம் தலைவன் மாட்டுக் கொண்ட அன்பு நிலத்தினும் பெரிதாய், வானத்தினும் உயர்ந்ததாய், ஆழ்கடலினும் ஆழமுடைத்தாய் அமைந்தது ஆகும்:

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆரளவு இன்றே சாரற் கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.124

ஒரு பசுவினால் கிடைக்கும் ஊதியத்தைக் கொண்டு உண்ணும் உணவையுடைய செல்வச் சிறப்பில்லாத இல்வாழ்க்கை, அழகும் இளமையும் நிறைந்த தலைவி அக்குடும்பத்தில் மணமகளாகப் புகுந்ததன் பிற்பாடு இனிமை நிறைந்த விழாவெனும்படி செல்வச் சிறப்பினையுடைய தாயிற்று' என்று ஊர்மக்கள் பேசுவதாகத் தூங்கலோரி என்னும் சங்ககாலப் புலவர் கூறுவர்:

ஓரான் வல்சிச் சீரில் வாழ்க்கை பெருங்நலக் குறுமகள் வந்தென இனிவிழ வாயிற் றென்னுமிவ் வூரே.'125

123. மதுரைக்காஞ்சி: 461-467. 124. குறுந்தொகை: 3. 125. குறுந்தொகை: 265:4-6.