பக்கம்:சங்க கால மகளிர்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

52

பல சான்றோரே! பல சான்றோரே! நின் தலைவ னோடு இறப்ப நீ போவென்று கூறாது அதனைத் தவிர்க என்று சொல்லி என் செயலை விலக்கும் பொல்லாத துன்பத்தையுடைய பல்வேறு சான்றோரே!

'வெள்ளரி விதை போன்ற நெய்யற்ற நீர்ச் சோறு எள்ளுத்துவை, புளி கூட்டிச் சமைத்த வேளை இலை ஆகியவற்றை உண்டும், பாயில்லாமல் பருக்கைக் கற்கள் மேல் படுத்தும், கைம்மை நோற்கும் பெண்டிர் போன்றோர் அல்லேம் யாம்! ஈமப்படுக்கை உங்களுக்கு அரிதாகத் தோன்றலாம். என் கணவன் இறந்துபட்டான்; ஆதலால் எனக்கு அந்த ஈமத் தீயே தாமரைக் குளத்துத் தண்ணிர் போல இன்பம் தருவதாகும் என்று நீங்கள் அறிவீர்களாக' என்று கூறினாள்:

பல்சான் நீரே! பல்சான் நீரே! செல்கெனச் சொல்லாது, ஒழிகென விலக்கும் பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே! துணிவரிக் கொடுங்காய் வாள்போழ்ந் தட்ட காழ்போல் கல்விளர் நறுநெய் தீண்டாது அடைஇடைக் கிடந்த கைபிழி பிண்டம் வெள்ளென் சாங்தொடு புளிப்பெய்து அட்ட வேளை வெங்தை வல்சி ஆகப் பரற்பெய் பள்ளிப் பாயின்றி வதியும் உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம் நுமக்குஅரிது ஆகுக தில்ல; எமக்குஎம் பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்பற வள்ளிதழ் அவிழ்ந்த தாமரை நள்ளிரும் பொய்கையும் தீயும் ஒரற்றே. *128.

 128-புறநானூறு: 246.