பக்கம்:சங்க கால மகளிர்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11.
மகளிர் நிலை

மிழ் இனம் உலகில் தோன்றிய இனங்களுள் மிகப் பழமையான இனங்களில் ஒன்று என்பது ஆராய்ச்சியாளர்கள் இப்புக் கொண்ட உண்மையேயாகும். தற்போதையர் தென்னாட்டையும் அதன் தெற்கில் கடல்கொண்ட பகுதியையும் இணைந்ததொரு பகுதி, அந்நாளில் லெமூரியா என வழங்கப்பட்டதாகவும், அப்பகுதியில்தான் மனித நாகரிகம் முதன் முதலில் தோன்றி வளர்த்தது (cradle of human race) என்றும் அறிஞர் கூறுவர். வடக்கே சிந்து கங்கைச் சமவெளியில் இற்றைக்கு ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிலவிய நாகரிகம் திராவிட நாகரிகம் என்று கூறுவர் ஹீராஸ் பாதிரியார்.[1] பிற்காலத் தமிழிலக்கணமாம் புறப்பொருள் வெண்பா மாலை,

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்த குடி.[2]

என்று தமிழ்க்குடிநிலையின் பழமையினைப் பேசும். இவ்வளவு பழமையான தமிழினத்தில் – தமிழ்ச் சமுதாயத்தில் மகளிர் பெற்றிருந்த இடம் மாண்பு நிறைந்தது, சிறப்பானது என்று கூறலாம்.


  1. “Being Dravidians, the inhabitants of Mohe-njo Daro and Northern India, naturally spoke of a Dravidian language” - Rev. Fr. Heras Light on the Mohenjo-Daro Riddle, 14.
  2. புறப்பொருள் வெண்பா மாலை: கரத்தைப் படலம்: 14