பக்கம்:சங்க கால மகளிர்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60


சங்கத்தமிழ் இலக்கியத்தைத் துருவி ஆய்ந்த சான்றோர்களில் மிகப் பலரும் இக்கருத்தையே கொண்டுள்ளனர்.

“ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்” (The Tamils Eighteen hundred years ago) என்னும் அரியதோர் ஆராய்ச்சி நூலினை எழுதிய அறிஞர் வி. கனக சபைப்பிள்ளை (V. Kanagasabai Pillai) அவர்கள் “மகளிர் சமுதாய வாழ்வில் சுதந்திரமாக அதே நேரத்தில் தங்களுக்கே இயல்பான நாணத்தோடு கலந்து பழகினர்” என்று குறிப்பிட்டுள்ளார். [1]

வரலாற்றுப் பேரறிஞர் திரு. கே. ஏ. நீலகண்ட சாஸ்திரியார் அவர்கள் தம் “தமிழர் பண்பாடும் வரலாறும்” என்ற நூலில், “சமுதாயத்தில் பெண்களுக்கு நல்ல சுதந்திரமிருந்தது. புகழ்பெற்ற பல பெண் புலவர்கள் இருந்தார்கள்” என்று எழுதியுள்ளார்.[2]

தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியான சுந்தரனார் அவர்கள் பெண் உரிமை பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

“பழந்தமிழ்நாடு பெண் மக்கள் உரிமைக்கு ஓர் இலக்கியம் என்று கூறல் உயர்வு நவிற்சியாகாது. பழந்தமிழ் நூல்களைத் துருவித்துருவி ஆராய்ந்தால் அவற்றில் யாண்டும் பெண்ணுரிமை காணலாம். ‘பெண் தாழ்ந்தவள், குறையுடையான், அடிமை என்னும் உணர்வே அற்றை நாளில்


  1. V. Kanakasabhai Pillai, “The Tamil Eighteen hundred years ago” P. 120
  2. திரு. க. அ. நீலகண்ட சாஸ்திரி: “தமிழர் பண்பாடும் வரலாறும்” , பக்கம். 115.