பக்கம்:சங்க கால மகளிர்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65

வாகவும் நடத்தப்பட்டாள் (Women is the fountain-head of love. She was free, independent and the equal of man and she was treated with uniform courtesy and respect. She was not a mere household beast of burden She was indispensable and the vital half of man. She was held in reverence and adoration in the Tamil land of the Sangam age, [1]

இனி, மேற்காணும் கூற்றுக்களின் வன்மை மென்மைகளைச் சங்க இலக்கியப் பாடல்களைக் கொண்டு ஆராயலாம்.

நாம் முன்னரே கண்டபடி, தலைவனுக்கு தலைவியும் பத்துவகைப் பண்புகளால் ஒத்து விளங்குதல் வேண்டும். அவையாவன: பிறப்பு, குடிப்பிறப்பு, ஆண்மை, வயது. அழகு, அடக்கம், அருள். அறிவு, செல்வம் முதலிய பத்துப் பண்புகள் என்பர்.[2]

மெய்ப்பாட்டியலில் இப்பத்துவகை ஒப்புகளைக் (equalities) கூறிய தொல்காப்பியனார் களவியலில்

ஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப.[3]

என்று குறிப்பிட்டார்.

சமுதாயத்தின் நாகரிகத்தை அதன் மொழிச் சொற்களில் கண்டு கொள்ளலாம் என்றும் மொழி நாகரீகத்தை வஞ்சிக்காது என்றும் கூறுவர்.[4]


  1. K. Gnanambal, Home life among the Tamils in the Sangam age, p. 4.
  2. தொல்; மெய்ப்பாட்டியல் : 25
  3. தொல்: களவியல்: 2.
  4. டாக்டர் வ. சுப. மாணிக்கம் : தமிழ்க்காதல் : ப. 152.