பக்கம்:சங்க கால மகளிர்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

அடித்தளத்தில் அமையும் இல்லற வாழ்க்கை இளமைக் காலத்திலன்றி முதுமையிலும் மகிழ்ச்சி மண்டிக் கிடப்பதாகவே அமைவதனைத் தம் ‘குடும்ப விளக்கு’ என்னும் நூலில் ‘முதியோர் காதல்’ என்ற பகுதியில் ‘அவன் உடம்பு புதிய மலர்போல் இல்லாமல் புற்கட்டு போன்று உருத்துவதாக உளது: அவள் நடனமாடும் நடைபோட்டு நடக்கவில்லை; தள்ளாடி நடந்துவிழும் முதியவள்; சத்திரனைப் போன்ற முகம் உடையவள் அல்லள் வற்றிய நிலத்தில் குழிந்த பள்ளங்கள் போன்று அவள் கண்கள் உள்ளன. இவற்றில் எனக்கு இன்பம் தருவது எது? அவள் இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்’ என்கிற ஓர் நிலையே எனக்கு இன்பத்தை நல்குவதாகும் என்று கணவன் ஒருவன் தன் மனைவி பற்றிக் குறிப்பிடுவதாகக் குறிப்பிட்டுள்ளார்:

புதுமலர் அல்ல; காய்ந்த
புற்கட்டே அவள் உடம்பு!
சதிராடும் நடையாள் அல்லள்
தள்ளாடி விழும்மூ தாட்டி
மதியல்ல முகம்அ வட்கு
வறள் நிலம்! குழிகள் கண்கள்!
எதுஎனக் கின்பம் நல்கும் ?

இருக்கின்றாள் என்ப தொன்றே.[1]

மேல் நாட்டினரைப் போல் வயது முதிர்த்த மகளிரை மணக்கும் வழக்கம் தமிழகத்தில் இல்லை. எனவேதான் குலம், கல்வி, வயதால் ஆண்கள் ஒருபடி மேம்பட்டிருக்கலாம் என வகுத்தனர். மேலும் ஆணின் தன்மைகளும் தொழிற்பாடுகளும் வேறு பெண்ணின் தன்மைகளும் தொழிற்பாடுகளும் வேறாகும். தொல்காப்பியனாரும்


  1. பாரதிதாசன்: குடும்பவிளக்கு: முதியோர் காதல்.