பக்கம்:சங்க கால மகளிர்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

71

சங்க இலக்கியங்கள் என்று நுவலப்படும் பத்துப் பாட்டும், எட்டுத் தொகையும் 2381 பாடல்களைக் கொண்டதாகும். இவற்றில் அகத்திணை பற்றிய பாடல்கள் 1862 ஆகும். அவையாவன:

நற்றிணை
400
குறுந்தொகை
401
ஐங்குறுநூறு
500
பரிபாடல்
8
கலித்தொகை
149
அகநானுாறு
400
பத்துப்பாட்டு
4
(முல்லைப் பாட்டு,

நெடுநல் வாடை,
1862
குறிஞ்சிப் பாட்டு,

பட்டினப் பாலை,
ஆகிய நான்கு)

பிறபாடல்களிலும் அகப்பாடல் தமிழில் மிகுதி என்பது தெளிவு. அகத்திணைப் பாடல்களிற் பெரும்பாலான பாடல்கள் தலைவியைச் சுற்றியே சுழலக் காணலாம். அகத்திணை நாடகத்தில் இடம் பெறும் பாத்திரங்கள் தலைவி, தலைவன், தோழி, செவிலி, நற்றாய், பாங்கன் முதலியோர் ஆவர். இவர்களில் தலைவி, தோழி கூற்றாய் வரும் பாடல்களே மிகுதி. அகத்திணைப் பாடல்களில் பெண் பாத்திரங்களின் உள்ளமும் உணர்ச்சியும் செயலும் செய்தியுமே விளங்கக் கூறப்படுகின்றன.

அகத்திணைப் பாடல்களை நன்கு ஆராய்ந்த டாக்டர் வ. சுப. மாணிக்கம் அவர்கள் தம் முடிந்த முடிவுகளைத் தமிழ்க் காதல் (The Tamil Concept of Love) என்ற ஆராய்ச்சிக் கட்டுரையின் இறுதியிற் பெய்துள்ளார்: அக்கருத்துகள் வருமாறு:

"மனிதர்களின் காதற் செய்கையினை விளக்கிக் காட்டும் இலக்கியத்தில் மகளிர் மதிப்பு சிறந்த இடத்தினைப்