பக்கம்:சங்க கால மகளிர்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

பொதுவாகப் பெற்றுள்ளது. சங்க காலத்தில் ஆண் பெண் உயர்வு தாழ்வு இல்லை. பகுத்தறிவு வாய்ந்த உயர்திணைக் குரியவர்களாகவே ஆண், பெண் ஆகிய இருவரையும் தமிழர் கொண்டனர். கிரேக்கர்கள் செய்தது போன்றே குடும்பப் பொறுப்பினையும். குழந்தை வளர்ப்பினையும் மகளிரிடத்தே ஒப்படைத்தனர். ஒருமை மனமும், கற்புத் திறனும் மகளிர் தம் நீங்காப் பண்புகளாக அமைந்து, இடையீடற்ற குடும்ப வாழ்வின் மேன்மைக்கும் மகிழ்ச்சிக்கும் உதவின. சமுதாயம் மகளிர் தம் நிலைத்த மனச் சான்றினையும் பொறுப்பினையுமேதான் நிலைக்கவும் இயங்கவும் எதிர்நோக்கி நின்றது”. (A literature, the object of which is the treatment of general behaviours of human beings, cannot but show respect for women in general indeed in the Sangam epoch, there was no superiority or inferiority of sexes. The Tamils regarded man and woman as two different beings of the class “uyartinai’ or rational beings. They as the Greeks did, entrusted the management of the family and the bringing up of children to woman, while work outside came to be the responsibility of man. Monogamy and chastity were strictly enjoined on woman for the uninterrupted continuation of family life and for the pro-creation of good and pure progeny. Thus society depended upon the consciousness of women of their responsibility for its stability and existence”).[1]

முதலாவதாகக் ‘களவு’ அடிப்படை அமைந்த பாடல்களை நம் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளுவோம்.


  1. Dr. V. Sp. Manickam, The Tamil concept Love: p. 317-318.