பக்கம்:சங்க கால மகளிர்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

அவளைத் தேடிப் போகிறாள். பாலை வழியில் இறைவன் மாட்டு நெஞ்சம் செலுத்தும் முக்கோற்பகவர் (திரிதண்டு சந்நியாசிகள்) எதிர்ப்படுகின்றனர். அவர்களைக் கண்டு செவிலித்தாய் “அந்தணர்களே! என் மகள் ஒருத்தியும், இன்னொருத்தியின் மகன் ஒருவனும் தம்முள்ளே காதலாற் கலந்தவர், தாம் மட்டுமே அறியக் களவிலே கூடி மகிழ்ந்தவர், அத்தகையார் இருவரையும், எதிரில் வழியிடையே செல்லக் கண்டீர்களோ?” என்று வினவுகின்றாள்.

இதற்கு அப்பெருமக்கள் பின்வருமாறு மறுமொழி தருகின்றனர்:

“பெருமாட்டியே! அவர்களை நாங்கள் காணாமல் இருக்கவில்லை. கண்டோம்: அழகிய இளைஞனுடன் அரியதான பாலைவழியில் செல்லவும் துணிந்த சிறப்புமிக்க பெண்ணின் தாயே! நீர் இனி மன அமைதியோடு நும் வீடு நோக்கித் திரும்பிச் செல்வீராக!

“மணப்பொருள் பலவும் கூட்டிய நறிய சந்தனம், தம் உடலிலே பூசிக் கொள்பவர்க் கல்லாது, மலையிலே பிறந்தாலும், அம்மலைக்கு என்ன நன்மையைச் செய்யும்? நினைத்துப் பார்த்தால், உன் மகளும், உமக்கு அத்தகைய சந்தனம் போன்றவளே அல்லவோ!

“நீர் நிரம்பிய வெண்முத்துக்கள், கோத்து அணிபவர்க்குத் தானே பயனைத் தரும். அஃதன்றி, நீரினுள்ளே பிறந்தாலும், அந்நீருக்கு அவை என்ன பயனைச் செய்யும்? ஆழச் சிந்தித்தால், உம் மகளும் உமக்கு அம்முத்துக்கள் போன்றவளே அல்லவோ!

“ஏழு நரம்புகளிலே பிறக்கும் இனிய இசை யாழிலே தான் பிறக்கும். ஆயினும் இசைத்து அனுபவிப்பவருக்கு இன்பந் தருமேயல்லாது, பிறந்த யாழுக்கு அதனால் என்ன