பக்கம்:சங்க கால மகளிர்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

77

பயன் ஏற்படும்? ஆராய்ந்தால் உம் மகளும் உமக்கு அத்தகையவளேயாவாள் அல்லவோ!

“ஆகவே, அவள் காதலனுடன் போனாள் எனக் கருதி வருந்துதல் வேண்டா. தேடிச் செல்லலும் வேண்டா. நும் மகள் தலைசிறந்த கற்பினள் ஆவள். அவளுக்கு எத்தகைய துன்பத்தையும் சூழாதீர்கள். சிறந்தவனான தன் காதலனோடு அவள் சென்றுவிட்டாள். அவள் கொண்ட முடிவே சிறிதும் அறநெறி தவறாத ஒழுக்கமும் ஆகும் என்று அறிவிராக .”

இவ்வாறு அச்சான்றோர் செவிலித் தாய்க்கு அறிவுறுத்தினர். [1]

இந்தப் பாட்டு, சங்க காலச் சமுதாயத்தில் மகளிர் தத்தம் கணவரைத் தாமே தேர்ந்தெடுக்கும் உரிமையினைப் பெற்றிருந்தனர் என்பதனை உணர்த்தும். பிறந்த வீட்டுப் பாசத்தினும், புகுந்த இடத்தில் இல்லறக் கடமையினை மேற்கொள்ள வேண்டும், அதுவே அறநெறி, உலகியல்பு என்று நினைத்த தலைவியின் நிலையினை உணர்த்தும். தலைவியின் இச்செயலை அறிஞர் பின்வருமாறு துணிந்தறிவர். “பெண்ணின் பெருந்தக்கதான கற்பினைப் பெற்றோரும், அயலவரும், முனிவர்களும் மதிப்புடன் போற்றிய பான்மை தெரியவரும். எத்தகைய துன்பம் இடைப்படினும் பெற்றோரையும் துறந்து, தன் நெஞ்சத்தைப் பிணித்தானுடன் கொடிய பாலையில் தலைவி செல்லும் அருஞ்செயல் பாராட்டப் பெறும். எனவே அகத்தினை இலக்கியங்களில் தலைவியே தலையாய பாத்திரமாக விளங்குகிறாள்; மற்றப் பாத்திரங்கள் அவளைச் சுற்றியே சுழல்கின்றனர். தலைவியும் தலைவியின் சுற்புமே அகப்பொருள் இலக்கியங்களின் சாரப் பொருள்


  1. பாலைக்கலி: 8.