பக்கம்:சங்க கால மகளிர்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6


தாலாட்டுப் பாடலிலும் பெண்மையைப் போற்ற அவர் மறக்கவில்லை.

வண்மை உயர்வு மனிதர் நலமெல்லாம்
பெண்மையினால் உண்டென்று பேசவந்த பெண்ணழகே
நாய் என்று பெண்ணை நவில்வார்க்கும் இப்புவிக்குத்

தாய் என்று காட்டத் தமிழர்க்கு வாய்த்தவளே[1]

என்கிறார்.

பொருளையும் பெரிதென் றெண்ணாள்
பூண்வேண்டாள் தனை மணந்தோன்
அருளையே உயிரென் றெண்ணும்
அன்பினால் வருத்தி றக்கும்
உருளைகற் கிழங்கில் தன்னை உடையானுக் கிருக்கும் ஆசைத்

திருவுளம் எண்ணி எண்ணிச் செவ்விள நகை செய்கிறாள்[2]

என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சங்க காலத்தில் பெண்மை பெரும் சிறப்பாகப் பேசப்பட்டுள்ளது. பெண்கள் பண்பாலும் வாழ்வு நெறியாலும் சிறந்தவர்கள் என்ற குறிப்பு நுண்ணிதின் உணர்த்தப்படுகிறது. சங்ககாலப் புலவர்களிலே அறிவுத் திறமும் ஆன்ற புலமை உரமும் நிறைந்த பெண்பாற் புலவருமான ஒளவையார்.


  1. பாரதிதாசன்; பாரதிதாசன் கவிதைகள்; முதல் தொகுதி: பெண் குழந்தை தாலாட்டு பக்:127
  2. பாரதிதாசன்: குடும்பவிளக்கு முதற்பகுதி: பக்: 16