பக்கம்:சங்க கால மகளிர்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79

"எம் இனத்து ஆயர் முலைவிலை (ஐங்குறுநூற்றில் தழை விலை என்றது போல-அதாவது பரிசப் பொருள் என்பதாம்) கேட்க மாட்டார்கள். ஆனால் கொல்லேற்றுக் கொம்பினிடையினைத் தாம் காதலிக்கும் பெண்களின் முலையிடைப் போலக் கருதி ஆர்வமுடன் வீழ்ந்து தழுவினால், அவனையே தம் மகட்கேற்றவனாகக் கருதுவார்கள் ஆயர்கள்" என்ற குறிப்பும் பெண்ணின் அருமையினை உணர்த்தும். [1]

இதே போன்று அகநானூற்றிற் காணப்படும் இரண்டு பாடல்கள் இச்செய்தியினை மேலும் வலியுறுத்துகின்றன.[2]

நெய்தல் நிலப்பெண் ஒருத்தியைக் காதலித்துவரும் நெய்தல் நிலத் தலைவன் ஒருவன், "அழகு மிகுந்த இத் தலைவி, நலம் மிகந்த சிறந்த பொருள்களையெல்லாம் மரக்கலம் நிறையக் கொணர்ந்து முலைவிலையாக நாம் கொடுத்தாலுங்கூட, நம்மால் பெறுவதற்கு அவள் அரியவளே" என்று தன் நெஞ்சிற்குச் சொல்லிக் கொள்வதாக ஒரு பாடல் அமைந்துள்ளது. [3]

இவற்றால் நாம் அறிந்து கொள்வது என்று ஓர் அரிய கருத்து உளது. அதுவே சங்ககாலத் தமிழ்ச் சமுதாயத்தில்


  1. முல்லைக்கலி: 3: 71-73

    "விலைவேண்டார்; எம்மினத்து ஆயர் மகளிர்
    கொலை யேற்றுக் கோட்டிடைத் தாம் வீழ்வார் மார்பின்
    முனலயிடைப்போலப் புகின்"

  2. அகநானூறு: 280; 390
  3. அகநானூறு: 280: 4-6

    "............ஆய்தொடிக் குறுமகள்
    நலஞ்சால் விழுப்பொருள் கலம்நிறை கொடுப்பினும்
    பெறலருங் குரையள்"