பக்கம்:சங்க கால மகளிர்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

81

81

என அந்நாளில் வழங்கப்பட்டது.'190 இதனால் சங்ககால மகளிர் எத்துனைச் சிறப்புடன் போற்றப்பெற்றனர் என்பது தெளிவாகும்.

அன்பின் ஐந்திணை

சங்ககாலத் தலைமக்கள் அதாவது தலைவனும் தலைவியும் ஒருவர்மாட்டு ஒருவர் பெருங்காதல் கொண் டிருந்தார்கள். தலைவனிடத்துத் தான் கொண்ட ஆழ்ந்த காதலைத் தலைவி ஒருத்தி, நிலத்தினும் பெரிது என்றும் கடலினும் ஆழ்ந்தது என்றும், வானிலும் உயர்ந்தது என்றும் சொல்லிக் கொள்கிறாள். 191

"காதலர் தனக்கு இன்பம் நல்கவில்லையெனினும் அவரைப் பல முறை தான் பார்த்துக் கொண்டிருப்பது மகிழ்ச்சியைத் தருவதாகும்' என்கிறாள் பிறிதொரு தலைவி.'192

'அழாதே என்று நம் அழுத கண்களைத் துடைப்பவர் நம் தலைவர்' என்கிறாள் மற்றொரு தலைவி.193

நீரில் நீந்தி வாழும் மகன்றில் எனும் உயிரினங்கள் ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வனவாகும். நீரில் நீந்திச் செல்லும்பொழுது இடையில் ஒரு பூ குறுக்கிட்டு

190. (1) நற்றிணை:393'நமர்கொடை நேர்ந்தனர்.

(2) ஐங்குறுநூறு: 300: 2-3.

'பெருங்கல் வெற்பன் வந்தனன் எதிர்ந்தனர் கொடையே’ (3) அகநானூறு: 282:13

'எந்தையும் எதிர்ந்தனன் கொடையே’ 191. குறுந்தொகை: 3. 192. குறுந்தொகை: 60 193. குறுந்தொகை: 82:1-3