பக்கம்:சங்க கால மகளிர்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

82

விட்டாலும், அவ் இடைநேரம் பலவாண்டுகள் ஆயினது போன்று துன்புறுமாம். அது போன்றே தலைவன் ஒரு சிறிது நீங்கினாலும் பொறுக்கமாட்டாது புலம்புகின்றாள் ஒரு தலைவி.194

தலைவன் பிரிய நினைக்கின்றபொழுது அவன் பிரிந்து தனியே செல்லும் காடு துன்பந் தருவதென்றால், தலை வனைப் பிரிந்து தனியே இருக்கும் தலைவிக்கு வீடு இனிமையாக இருக்குமோ? என்று குறிப்பிடுகின்றாள் தலைவி"195

மனையில் வாழும் மகளிர்க்கு ஆடவரே உயிர்' என்று குறிப்பிடுகின்றாள் தலைவி ஒருத்தி."196

"சிறிய பலாமரக் கொம்பிலே பெரிய பலாப்பழம் தொங்குவது போல, இவள்தன் சிற்றுயிர், தலைவன் மாட்டுக் கொண்ட பெருங்காதலைத் தாங்கி நிற்கின்றது' என்று தோழி தலைவியின் காதலை எடுத்துரைக்கின்றாள்.'197

இதற்கு ஒத்த நிலையிலேயேதான் தலைவன் தலைவி யிடம் கொண்டிருக்கும் காதலும் அமைந்திருக்கக் காண லாம்.

- 'தலைவியின் நீர் போன்ற மென்மைச் சாயல் தீ போன்ற தன் வன்மையுரத்தைத் தணித்து விட்டது' என்று தலைவன் ஒருவன் குறிப்பிடுகின்றான். 198

194. குறுந்தொகை: 57. 195. " 124. 196. " 135 197. " 18 198. " 95