பக்கம்:சங்க கால மகளிர்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

தொடர்ந்து அன்பு செலுத்தி வருவதாகத் தலைவியொருத்தி குறிப்பிடுகின்றாள்.[1]

பிறிதொரு தலைவி, தலைவன் திருமணம் செய்து கொண்ட நாளைவிடவும் தற்பொழுது தன் மாட்டுப் பேரன்பு பூண்டொழுகுவதாகச் சொல்கிறாள்.[2]

இந்த இரு செய்திகளும் சங்க காலத் தலைவி உடல் கவர்ச்சியாலன்றி உள்ளப்பண்பு காரணமாகத் தலைவனால் என்றும் விரும்பப்பட்டாள் என்பதனை யுணர்த்தும். உடல் நாட்டம் குறைந்து, ஒருவர் உள்ளத்தையொருவர் புரிந்து கொண்டு, அவரவர்தம் மனப் பண்பாட்டினை படிப்படியே உயர்த்தி வாழும்பொழுதுதான் இல்வாழ்க்கை இனிமையும் செம்மையும் பெறுகின்றது.

மனைக்கு விளக்கு

மனைவி மனைக்கு விளக்கு என்பதும், இல்லத்தை ஆள்வதனால் இல்லாள் என்பதும், மனைக்கு முதன்மை


  1. (1) குறுந்தொகை: 385; 6:

    'அன்றையன்ன நட்பினன்'
    (2) நற்றிணை: 332:8
    'தலைநாள் அன்ன பேணலன்'
    (3) அகநானூறு: 332:15
    'தண்டாக் காதலும் தலைநாள் போன்மே’.
    (4) குறிஞ்சிப்பாட்டு: 23 8.
    'அன்றை யன்ன விருப்போடு"

  2. அகநானுாறு:

    "பாண்மகன்
    எண்ணுமுறை நிறுத்த பண்ணி னுள்ளும்
    புதுவது புனைந்த திறத்தினும்
    வதுவை நாளினும் இனியனால் எமக்கே"