பக்கம்:சங்க கால மகளிர்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

87

 பண்பான சொற்களையே கூறும் இனிமையும், அமிர்தம் நிறைந்த செக்கச்சிவந்த வாயையும், அழகான பார்வையையும், ஒளிவிடும் நெற்றியையும், அசைந்த நடையையும் உடையவள்' என்றும்' மகளிர் சங்க இலக்கியங்களிற் சிறப்பாகப் பேசப் பெற்றுள்ளனர். மகளிரைக் குறிப்பிடும் சொற்கள் மங்கல மகளிர், 29 மனையோள், 219 வெய்யோள்2= வசையில் மகளிர்212, மெல்லியன் மகளிர் சேயிழை மகளிர்', வடமீன் தொழுதேத்தும் வயங்கிய கற்பினாள்?" என்று பலவாறாகச் சிறப்பித்துப் பேசப்படுகின்றாள்.

ஒரு தனிச் சிறப்பு

பண்டைத் தமிழ் நூல்கள் போலப் பெண்ணுரிமையைப் போற்றிய நூல்கள் வேறு எம்மொழியிலும் இல்லை. மனைவிமீது ஐயுற்றதாகக் கூறுதலைக் கயமை என்று கருதினர் என்பதைத் தமிழ் கற்றோர் அறிவர். தமிழ் நூல்களில் அக்கயமை இடம் பெறவில்லை. ஆனால் பிற மொழி நூல்களில் அஃது இடம் பெறுகின்றது. ஆங்கில நூல்களிலும் அஃது உண்டு. தலைவி தலைவன் மீது ஐயுற்றதாகக் கூறுவனவே தமிழ் நூல்கள். அவ்வாறு கூறுவதால் உயர்வு பெண்பாலார்க்கேயன்றோ! அவரை நல்லார்


208. பதிற்றுப்பத்து; 2: 6: 10-13.

209. புறநானுாறு: 3.32; 5 2 I 0. # H. 3.33; 8

2 11. # To 222, 2 212. பதிற்றுப்பத்து 12:23 2 I 3. H. H. 40;23

2 I 4. | F. 43; 2

215. பாலைக்கலி: I : 2 I