பக்கம்:சங்க கால மகளிர்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்

அவ்வழி கல்லை வாழிய நிலனே[1]

என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன் பொருள்: “நிலனே! நீ ஒன்றில் நாடேயாக; ஒன்றில் காடேயாக; ஒன்றிற் பள்ளமேயாக; ஒன்றில் மேடேயாக; எவ்வாறாயினும் எவ்விடத்து நல்லர் ஆண் மக்கள் அவ்விடத்து நீயும் நல்லையல்லது, நினக்கென ஒரு நலமுடையை யல்லை, வாழி” என்பதாகும்.

ஒரு நாடு சிறப்பதற்கு அந்நாட்டின் மண்வளம் காரணமன்று: அந்நாட்டு ஆடவரின் – ஆண்மக்களின் நடைநலமே – மனநலமே – ஒழுக்கநலமே காரணமாக அமையும் என்பது ஒர் உயரிய உண்மையினை உள்ளடக்கிக் கொண்டிருக்கின்றது.

சங்க கால மகளிர் பலவகையாலும் மாட்சிமை பொருந்தியவர்கள் என்பது இதனால் பெறப்படுகின்றது. புறநானூற்றின் பழையவுரையாசிரியர் ‘ஆடவர்’ என்ற தொடருக்கு ‘ஆண்மக்கள்’ என்றே பொருள் விரித்துரைப்பது ஈண்டு உணரத்தக்கது.

இனி, தொல்காப்பியனார் பெண்ணின் பண்புகள் பற்றிக் குறிப்பிட்டிருப்பதனை முதலிற் காண்போம்.

அச்சமும் நானும் மடனும்முந் துறுதல்

நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப.[2]

  1. புறநானுாறு: 187
  2. தொல்காப்பியம்: களவியல்: 8