பக்கம்:சங்க கால மகளிர்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

நள்ளிரவில் வாராதே : அன்வாறு நீ வரின் உனக்கு வழியில் தீங்குகள் உண்டாகுமென்று எண்ணி நாங்கள் வருந்துவோம்: நீ தீங்கின்றி வாழ்வாயாக” என்று குறிப்பிடுகின்றாள்.[1]

இதனால் அஃறிணை உயிர்களிடத்தும் விளங்கிய கற்பு நிலை தெரிய வருகின்றது. அவ்வாறாயின் மகளிர் கற்பு நிலை பற்றி மேலும் விளக்கவும் வேண்டுங்கொல்?


பிறனில் விழையாமை

அடுத்து, பதிற்றுப்பத்தின் ஏழாம் பத்தில் செல்வக் கடுங்கோ வாழியாதனைப் பாடுங் கபிலர், “மார்பு மகளிர்க் கல்லது மலர்ப்பு அறியலை” என்கின்றார்[2] இதன் பொருள் “மனைவிக்கு மட்டுமே இன்பம் தருதற்குத் தன் மார்பினை விரித்துக் காட்டுவதன்றிப் பிற பகைவர்க்குக் காட்டுவதில்லை” என்பதாகும்.

இத்தகைய ஆண்கற்பினைப் பிறர் மனைவியை நோக்காத பேராண்மைப் பண்பு என்பர் திருவள்ளுவர். பிறன் மனைவியை விரும்பாத தன்மையினைப் பெரிய ஒழுக்கமாகப் போற்றுவர் திருவள்ளுவர்; அறத்தொடு கூடிய பண்பு என்றும் அதனைக் குறிப்பர்.[3]

அறநெறி நின்று அறமல்லாதவைகளைச் செய்தாலும் பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாமலும் வாழ்தல் நல்லது என்றுங் கூறுவர்.[4]

எனவே இவ்வொழுக்கப் பண்பிற்கியைபவே இவ்விரு அரசர்களும் சங்க காலத்தில் வாழ்ந்து காட்டினர் என


  1. குறுந்தொகை: 69.
  2. பதிற்றுப்பத்து; 7:3:4-5
  3. திருக்குறள்; 148
  4. திருக்குறள்; 78