பக்கம்:சங்க கால மகளிர்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

97


னுட் சென்று வெற்றி கொண்ட வஞ்சினத்தையுடைய கோசரைப் போன்ற வன்கண்மை (அச்சம்) யுடைய ஆராய்ச்சியும் வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.[1]

எனவே பெண்கொலை செய்வது சங்ககாலத்தில் நரகத்திற்குச் செல்லுமளவிற்குப் பாவச் செயலாகவும் சான்றோர்கள் கடிந்தொதுக்குவதற்குரிய பழிச் செயலாகவும், பிறர் படையெடுத்துத் தண்டித்து அழித்தற்குரிய செயலாகவும்ஒருங்கே கருதப்பட்டது என்பது தெரியவருகிறது.

பெண் மடலேறாமை

எத்துணைத் துன்பம் வந்த போதிலும் பெண் மடலேறுவது என்னும் வழக்கம் கிடையாது என்று தெளிவுறுத்தியுள்ளார் தொல்காப்பியனார். [2]

இந்நிலை பெண்ணின் மனவடக்கத்தினை விளக்குவதாகும்.

ஆண்கள் மடலேறுவேன் என்று கூறும் பாடல்கள் சில, சங்க இலக்கியத்தில் உண்டு. ஆனால் மகளிர் மடலேறுவேன் என்று சொன்னதாகவோ, அன்றி மடலேறி இறந்துபட்டதாகவோ ஒரு பாடல்தானும் இடம் பெறாமை கருதற்பாலது.

முந்நீர் வழக்கம்

தலைவன் தலைவியை அழைத்துக்கொண்டு, கடலிற் கலமேறிப் பொருளீட்டச் செல்லுகின்ற வழக்கம் கிடையாதென்கிறார் தொல்காப்பியனார். [3]


  1. குறுந்தொகை: 73.
  2. தொல்: அகத்திணையியல்: 35.

    "எத்திணை மருங்கினும் மகடூஉ மடன்மேல்
    பொற்புடை நெறிமை இன்மை யான"

  3. தொல்: அகத்திணையியல்: 34