பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

சர்கள் அணுகுதல் அரிது. இவனைப் பகை வேந்தர் அணுகுதல் என்பது அருமைப் பாடுடைத்து என்பதை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் அழகுபடப் பாடியுள்ளார். அவர் இக்கருத்தைக் கூறுகையில், “அவன் வீரவளையை உடையவன். அவன் பொதிகைமலை மேகம் தவழப்பட்டது. அவனை அணுகுபவர் ஆடல் மகளிரன்றி அரசர் குழுவினர் அல்லர்,” என்றனர். இவன் கொங்கு நாட்டவரோடு பொருது அவர்களைப் புறங்காட்டி ஓடச் செய்தவன் என்பதால் இவனது வீரத்தினை உணரவாம்.

இவனது கொடையும் புலவர் பாடும் புகழினைப் பெற்றது. புலவர்கட்கு வரையாது கொடுக்கும் வள்ளலாய் இவன் திகழ்ந்தான். இவன் தன்னையடைந்த பாணர்கட்கும், இரவலர்கட்கும் யானைகளைக் கணக்கின்றி ஈந்தவன். இவன் இரவலர்கட்கும் பாணர்கட்கும் வேழங்கள் பலவற்றை ஈந்தமையைப் புகழ்ந்த உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், “இவன் கொடுக்கும் யானையின் தொகைக்கு அளவே இல்லை. அவை வானத்தின் கண் காணப்படும் விண்மீன்களினும் பலவாகும்,” என உயர்வு நவிற்சியணி தோன்ற உயர்த்திக் கூறியுள்ளார். மேலும், அத்தொகையின் மிகுதிப்பாட்டைக் கூறுகையில், “இவன் கொங்க நாட்டவர்மீது போரினைத் தொடுத்த காலத்தில் விடப்பட்ட வேலினும் பலவாகும்,” எனவும் மொழிந்துள்ளார். இப்படிக் கூறிய இப்புலவர் பெருமானுக்கே ஓர் ஐயமும் பிறந்தது. யானை ஒரு முறைக்கு ஒரு குட்டியே ஈன வல்லது. இது குறித்தே “பன்றி பல ஈன்றிடினும் என் ?