பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

"நீல நாகம் நல்கிய கலிங்கம்
ஆல்அமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த
சாவம் தாங்கிய சாந்துபுலர் திணிதோள்
ஆர்வ நன்மொழி ஆய்”

எனப் புகழ்ந்து பேசியுள்ளார்.

அண்டிரனது பிரிவாற்றாமை

இத்தகைய பெருமைபெற்ற ஆய் இறந்தனன். அதுகாலை இவன் மாட்டு அன்புகொண்ட புலவர்கள் வருந்திப் பாடிய பாடல்கள் உள்ளத்தை உருக்கும் தன்மையன.

தம் இல்லத்திற்கு வந்த நல்விருந்தினரை உபசரித்து, இனி வருகின்ற விருந்தினரை எதிர்நோக்கி அவர்களையும் நன்முறையில் உபசரிக்கக் காத்து நிற்பவர் இறந்தபோது, இவர்களை நன்முறையில் உபசரித்து வரவேற்கத் தேவர் காத்து நிற்பர் என்பது நம் தமிழ் மறையின் துணிபாதலின், இம்முறையில் வாழ்க்கை நடத்திய ஆய் அண்டிரன் இறந்து மேலுலகம் சென்றபோது, இந்திரன் தன் திருமாளிகையின் முன் முரசம் ஒலிக்கச்செய்து “அண்டிரன் வருகின்றான்” எனக் கூறி வரவேற்கக் காத்து நின்றான் எனக் கையறு நிலை பாடிக் கவலை கொண்டனர் உறையூர் ஏணிச் சேரி முடமோசியார்.

குட்டுவன் கீரனார் பாடுகையில், 'அந்தோ ! அசையும் நடையுடைய பரியும் கரியும் பரிந்து அளிக்கும் பண்புடைய ஆயின் உடலம் சுட்டெரிக்கப் பட்டதே! தேரும் ஊரும் தெரிந்து கொடுக்கும் தெளிவுடை மனத்தனான அண்டிரனைக் கண்ணோட்ட