பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



4. திருமுடிக்காரி
திருமுடிக்காரியின் வீரப் பண்பு

திருமுடிக்காரி என்பவன் ஒரு சிற்றரசன் இவன் மலையமான் திருமுடிக்காரி எனவும், மலையமான் எனவும் அழைக்கப்படுபவன். இவன் சான்றோருடைத்துத் தொண்டை நாடு எனச் சாற்றப்பெறும் பெருமை பெற்ற தொண்டை நாட்டிற்கும், சோழவளநாடு சோறுடைத்து என்று சொல்லப்படும் சோழ வளநாட்டிற்கும் இடைப்பட்ட நடு நாட்டில் மலாடு என்னும் நாட்டின் அரசன் ஆவான் இம்மலாடு பெண்ணையாற்றங்கரையில் உள்ளது இவன் மலயமா நாட்டிற்கு மன்னனாக இருந்து திருக்கோவலூரைத் தன் நாட்டுத் தலைநகராகக்கொண்டு செங்கோல் செலுத்திவந்தான். இவனுக்குரிய மலை முள்ளூர் மலையாகும். இவன் சிற்றரசனேயாயினும் போர்முகத்தில் நின்று புறமுதுகுகாட்டாது போரிடும் ஆற்றல் மிகப் படைத்தவன். போர் என்ன வீங்கும் பொலங்கொள் தோளுடைய மறவர் பலரைக் கொண்டவன். இவ்வாறு படைபலமும், தோள்வன்மையும் இவன் கொண்டிருந்த காரணத்தால், இவனது துணையைப் பெரிதும் முடியுடைமூவேந்தர்களும் விரும்பியுள்ளனர். அவ்வேந்தர்கள் தம் ஒன்னார் மீது அமர்தொடுத்த காலத்தில் இவன் பெரிதும் துணை புரிந்துள்ளான். இதற்குச் சான்று சேரமான் மாந்தரலம் சேரல் இரும்பொறையும், சோழன் இராசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் பொருதவழி சோழற்குத் துப்பாகிய தேர்வண் மலையனைப் பாடிய பாட்டும் புறநானூற்றில் உள்ளது. அதனை வட