பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35

வண்ணக்கன் பெருஞ்சித்திரனார் பாடியுள்ளார். இப்போரிற் சோழனே வென்றான்.

இவனை யார் துணையாகக் கொள்கின்றனரோ, அவர்கள் வெற்றி பெறுதல் திண்ணம். அதில் யாதோர் ஐயமும் இன்று. இதன் பொருட்டே மூவேந்தர்களும், சமயம் வந்தபோதெல்லாம் இவன் துணை வேண்டி நின்றனர். இதனைக் கபிலர் அழகு படக் கூறுகையில், “ வீயாத் திருவின் விறல்கெழு தானை மூவருள் ஒருவன் துப்பாகியன்,” என்றும் “முரண் கொள் துப்பின் மலையன்," என்றும் புகழ்ந்தனர். இவன் வன்மையுடையவன் என்னும் பொருளில் தான் துப்பின் மலையன், துப்பாகியன் எனவும் சிறப்பிக்கப்பட்டனன்.

இவனது வீரத்திற்கு அஞ்சி ஓடிய வீரரும் உளர். ஒருமுறை ஆசிரியர் இவனது முள்ளூர் மலையை நெருங்கிப் போரிட்டபோது, அவர்களுக்கு இடையில் புல்வாய்கட்கிடையே புலிக்குட்டி புகுவது போலப் புகுந்து இவன் தன் வாளினை உறை கழித்து வீசி நின்றபோது, அவர்கள் இரிந்து ஓடினர் என்பதை நற்றிணை, “ஆரியர் துவன்றிய பேர் இசை முள்ளூர்ப் பலருடன் கழித்த ஒள்வாள் மலையனது ஒரு வேற்கு ஓடியது” எனக் கூறுகிறது.

புலவர்கட்கும் பரிசில் மாக்களுக்கும், பாணர் விறலியர்கட்கும் இல்லையென்னாது ஈயும் கடப்பாடும் கொண்டவனாய்த் திகழ்ந்தனன். அந்தணர்கட்கு நிலம் ஈந்து அகம் மகிழ்ந்தனன். ஆய் அண்டிரன் எங்ஙனம் தன்பால் வந்த இரவலர்க்கு ஆனைகள் பல ஈந்து அகம் களித்து வந்தனனோ, அது