பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

“பொது நோக்கு ஒழிமதி புலவர் மாட்டே” என்று தெருட்டுவாராயினர்.

காரி தனக்கென எதையும் வைத்துக்கொள்ளாதவன் என்பதைக் கபிலர் கூறும் கருத்து நாம் படித்துச் சுவைத்தற்குரிய பகுதியாகும். வரையாது கொடுக்கும் வள்ளல் என்பதை அக்கருத்தில் பதிய வைத்துள்ளார் புலவர் பெருமான், காரி பிறருக்குத் துணையாகும் துப்புரவினன் என்பது முன்பே கூறப் பட்டதன்றோ! அப்படிப்பட்டவனுடைய கோவலூரையோ முள்ளூர் மலையையோ எப்பகைவரேனும் கைப்பற்ற எண்ணுவரோ? எண்ணார். அன்றி, அவன் நாடு கடலால் கொள்ளப்பட்டு அழிவுறுமோ எனில், அதுவும் இயலாதது. ஏனெனில், நல்லவருடைய நாடு அங்ஙனம் அழிதல் இல்லையன்றோ ? ஆகவே, “வீரத்தண்டை அணிந்த காரியே நின்னாடு பரவையாலும், பகைவராலும் கொள்ளப்படாதது,” என்று விதந்து கூறினார். இவன் தனக்கென அந்நாட்டினை வைத்திருந்தால்தானே பகைவர் கொள்ள எண்ணமும் கொள்வர். அவை மழை வளம் தருதற்பொருட்டு வேள்வியினைச் செய்யும் நல்ல அந்தணர்களுக்குரிய பொருளாகிவிட்டன, அதாவது தன் நாடுகளை அந்தணர்களுக்கு அளித்து வந்தவன் என்பது தெரிகிறது.

காரி அந்தணர்களுக்கு நாடுகளைக் கொடுத்து உதவியதுபோல், இரவலர்கள் வந்து கேட்டபோது அவர்கட்குக் கொடுத்தற்கு உதவியாய் இருந்த பொருள், மூவேந்தருள் எவரேனும் தமக்குத் துணையாக வேண்டும் என அழைத்தகாலத்து ஈந்த பொருளேயாகும். அவற்றைத் தானே துய்க்காமல்