பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

புலவர் பாராட்டும் புகழ்மை உடையது

இனி மலையமான் திருமுடிக்காரியை வடமவண்ணக்கன் பெருஞ் சித்திரனார் எங்ஙனம் அறிந்து பாராட்டியுள்ளார் என்பதைக் சிறிது சிந்திப்போம். இப்புலவர் பாராட்டும் பாராட்டில் காரியின் கொடைக் குணமும் படை வன்மையும் தோன்றக் காணலாம். காரி பிறர்க்கு ஈந்து மிகுந்ததையே தான் உண்ணும் கடப்பாடுடையன் என்று பாராட்டியுள்ளார். அதனால், தனக்கு விஞ்சியது தருமம் என்னாது, பிறர்க்கு ஈந்து மகிழ்தல் மாண்புடையது என்று எண்ணும் கொள்கையுடையவன் என்பது தெரியவருகிறது. காரி போர்க்களத்தில் நின்று போராடுங்காலத்து இவன் சார்பாய் நின்று வென்றவர் இவனைப் புகழ்வர் என்றும், தோற்றவரும் “இவனன்றோ நம்மைத் தோல்வியுறுமாறு செய்தவன்” எனப் புகழ்ந்தே பேசுவர் என்றும் இப்புலவர் கூறுவதை நாம் உற்று நோக்கின், இவன் நட்டார் ஒட்டார் ஆகிய இரு திறத்தாராலும் பாராட்டப்படும் பெருமை சான்றவன் என்பது அறியக் கிடக்கிறது.

மாறோக்கத்து நப்பசலையார் என்னும்புலவரும் காரியின் ஈகைக் குணத்தையும் வென்றிச் சிறப்பையும் புகழ்ந்தனர். காரி புலவர் பாடும் புகழ் படைத்தவன் என்று இப்புலவர் குறிப்பிட்டிருப்பது நம் சிந்தனைக்குக் கொணர வேண்டியதாகும். இவர் இப்படிக் கூறியதன் நோக்கம், காரி வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலனால் பாடப்பட்டிருத்தலேயாகும். இதனை இவர் குறிப்பிடுகையில் “புலன் அழுக்கற்ற அந்தணாளன் பரந்திசை நிற்கப்