பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதப் பண்ணை வாசிக்க மறந்தனர் என்பதும் இப்புலவர் பெருமானால் குறிப்பிட்டுப் பேசப்படுவதை உற்று நோக்கினால், நள்ளி மகிழ்ச்சியால் தம்மையே மறக்கும். அளவுக்கு ஈயவல்லவன் என்பது தெளிய வேண்டி இருக்கிறது.


பாராட்டற்குரிய பண்பாடு

இக்கண்டீரக்கோப் பெருநற்கிள்ளியினிடம் அமைந்த குணம் ஒன்று மிக மிகப் பாராட்டற்குரியது. அதுதான் இசைவேண்டா ஈகைக் குணமாகும். இவன் “வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை; மற்றெல்லாம் குறியெதிர்ப்பை மீரதுடைத்து” என்னும் கொள்கையுடையவன். “மனத்துக்கண் மாசிலன் ஆதல் அறன் என்பதும், மற்றையவை ஆரவாரத் தன்மையுடையன,” என்பதும் இவன் உளங்கொண்ட உண்மைகளாகும். வாழ்க்கையில் ஒரு முறை இவன் நடந்துகொண்ட தினின்றும் இதனை நன்கனம் உணரலாம்.

வன்பரணர் ஒரு முறை தாமும் தம் சுற்றமுமாகப் புறப்பட்டுப் போய்க்கொண்டிருந்தனர். இப்புலவர் ஒரு குசேலர். அஃதாவது கிழிந்த ஆடையை அணிந்திருந்தவர். அக்கிழிசலும் நேர்நேராக இன்றி உடையிடையே சந்துகளைப் பெற்றதாக இருந்தது. இஃது இவ்வாறு இருந்தது என்பது இவர் கூறும் உவமையால் புலனாகிறது. அது பருந்தினுடைய இறகைப்போல இருந்ததாம். பருந்தின் இறகு ஒரே நிறமுடையதாக இன்றி இடையிடையே வெண்புள்ளி கலந்ததாக இருக்கும் அல்லவா ? அப்புள்ளிகளே ஈண்டு ஆடையில் அமைந்த

சி. ச.-4