பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

விரும்பாமல், “இல்லை என்றுரைப்போர்க்கு இல்லை யென்று உரையா இதயம் ஈந்தருள்," எனக் கேட்டதாக நாம் படிக்கும்போது, ஈகையில் எத்துணைப் பெருவிருப்பம் கொண்டிருந்தனர் நம் முன்னோர் என்பதை உணரலாம் அன்றோ ?

இங்ஙனம் பிறர்க்காக வாழ்ந்த பெரியவர்களையே நம்மவர் வள்ளல்கள், ஈகையாளர்கள், கொடையாளிகள், வண்மைமிக்கவர் என்று பாராட்டி வந்தனர். இங்ஙனம் உள்ளி உள்ள எலாம் உவந்து ஈயும் வள்ளியோர் என உரைக்கப்பட்ட பெருமை வாய்ந்தவர்கள் பலராக இருந்தாலும் இவர்களுள் சிலரைத் தேர்ந்தெடுத்து, இருபான் ஒருவர் என ஒரு தொகைப்படுத்திக் கூறுகின்றன நம் தொன்னூல்கள். அவ்விருபான் ஒருவரையும் மூன்றாக வகைப்படுத்தி எழுவர் எழுவராகவும் தொகைப்படுத்தினர். அங்ஙனம் தொகையாகக் குறிப்பிடப் பட்டவர்களை முதல் எழுவள்ளல்கள், இடையெழு வள்ளல்கள், கடையெழு வள்ளல்கள் எனக் கணித்துங் காட்டினர். அவர்களுள் முதல் எழுவள்ளல்களாக முதல் அணியில் நிற்பவர்கள் ‘சகரன், காரி, நளன், துந்துமாரி, நிருதி, செம்பியன், விராடன், என்பவர்கள். இடையெழு வள்ளல்களாக இருந்து ஏற்றம் பெற்றவர்கள், அக்குரன், அந்திமான், கன்னன், சந்தன், சந்திமான், சிசுபாலன், வக்கிரன் என்பவர்கள். கடையெழு வள்ளல்களாகக் கண்ணியம் கண்டவர்கள், பாரி, ஆய் அண்டிரன், எழினி, நள்ளி, மலயமான் திருமுடிக்காரி, வையாவிக் கோப்பெரும் பேகன், ஓரி என்பவர்கள். அவ் விருபான் ஒருவருள் கடைநின்ற கடையெழுவள்ளல்களின் வரலாறுகளை மட்டும் ஈண்டு உணர்வோ வி