பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

பதற்காக நின் அரண்மனையை எப்பொழுதும் அடைபட்ட நிலையில் தாழிட்டிருப்பை. இதனை யறிந்த என்போலும் பரிசில் மாக்கள் நின்னையும் நின் மரபில் உள்ளாரையும் பாடுதலை நீக்கினார். அங்ஙனம் பாடிற்றிலர் என்பதனை நன்கு உணர்ந்த யான், நின்னை யாங்ஙனம் புல்லுவேன் ? ஆகவே, யான் நின்னைத் தழுவிலேன்” என்று காரணம் காட்டினர். இதனால், நள்ளி ஒருவன் செய்த கொடைச்சிறப்பு அவனது சுற்றத்தாருக்கும் பெருமை தருவதாக அமைந்தது என்றால், நள்ளி வள்ளல் வரிசையில் வைக்கப்படுதற்கு எல்லாப்படி யானும் பொருத்தமா தலை அறிந்து இன்புறுக.