பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

53

கனி பழைய நிலைமையினையுடைய பெரிய மலையிடத்து, இரு மலைகளின் பிளவுக்கு இடையே ஏறுதற்கரிய உச்சியில் சிறிய இலைகட்கு நடுவே, மறைந்து காய்த்த நெல்லிக்கனியாகும். அதனை அரிதின் முயன்றே அஞ்சி கொணர்ந்தனன். அதன் அருமை அவனுக்குத் தெரிந்ததே. கொணர்தல் பெருமுயற்சி என்றாலும், உண்ட அளவில் எய்தும் பேறு அளவிடற்கரியது. அஃதாவது உண்டார் இறவாது நெடுநாள் உயிருடன் இருப்பதாகும். இத்துணையும் அறிந்திருந்தும், அதனை ஒளவையாருக்கு ஈந்து அக மிக மகிழ்ந்தான். தான் நீண்ட நாள் உயிருடன் இருத்தலினும், ஒளவை மூதாட்டியார் பல காலம் இருந்தால் தமிழ்மொழி மேலும் வளம்படும் என்பது இவன் கருத்து. திருத்தமுறாதவர் பலர் இவ்வம்மையாரால் திருத்தமுறுவர் என்பது இவன் எண்ணம். இன்றேல், என்ன காரணங்களால் தாம் பெருமுயற்சியுடன் பெற்ற நெல்லிக் கனியினை ஒளவை மூதாட்டியாருக்கு அளித்தனன்? அப்படி அளிக்கும் காலத்தும் அதனை அரிதில் முயன்று பெற்ற வரலாற்றினையோ, அன்றி அதனை உண்பதால் அடையும் பேற்றினையோ, ஒளவையாருக்கு உரைக்காது அளித்துப் புசிக்குமாறு ஈந்தனன். இப்பலனைக் கூறினால் ஒரு வேளை ஒளவையார் ஏற்க மறுத்து அதிகமானே அருந்தி நாட்டுக்கும் தம் போன்ற பரிசில்மாக்களுக்கும் பயனுடையவனாய் இருக்கட்டும் என்று எண்ணிவிட்டால், என் செய்வது என்பது இவனது எண்ணம். அவ்வருங்கனியை ஒளவையாரே அருந்தவேண்டும் என்பது இவனுடைய ஆழ்ந்த கருத்து. அவ்வம்மையார் அதனை வாங்கியுண்ட பிறகு அதன் அருமை பெரு