பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

தான் பல வெற்றிகனைக் கொண்டமைக்கு அறிகுறியாகப் பல களவேள்வியினைச் செய்தவன் எங்கள் தலைவன்.' என்று அறிவுறுத்தியுள்ளார். இங்ஙனம் பகைவரை நோக்கிக் கூறியதன் நோக்கம், அதிகமான் அத்துணை ஆண்மை படைத்தவன் என்பதை அறிவிக்கவேயாகும். இவனிடம் அமைந்த வீரர்கள் அரவம்போலும் சீறும் குணம் படைத்தவர்கள். பாம்பை அடிக்க அடிக்க அது மேலும் மேலும் கோபங்கொண்டு எழுவதுபோல, இவன்பால் இருந்த வீரர் பகைவர்கள் தம்மைத் தாக்கத் தாக்க எதிர்க்கும் ஆற்றல் படைத்தவர்கள். அதிகமானும் நாடக அரங்கினும், பாடல் அரங்கினும் முழவுகட்டித் தொங்கவிடப்பட்டிருப்பின், அம்மத்தளங்களில் காற்றின் வேகம் தாக்கியபோது எழும் ஓசையைக் கேட்டு இவ்வோசை பகைவர் எழுப்பும் போர்ப் பறையின் ஒலிபோலும் என்று உவகையுடன் வரவேற்று அவ்வோசை வழிச் சென்று எதிர்க்கும் விருப்பம் உள்ளவன்.

திருக்கோவலுர் வெற்றி

அதிகமான் பகைவர்க்கு இன்னாதவனாகவும் புலவர்களுக்கு இனியவனுமாகவும் விளங்கினன். அதிகமான், திருக்கோவலூர் அரசனை மலையமான் திருமுடிக்காரி பல வேற்றரசர்களை வென்று சிறப்புற்றுப் பெருமிதத்துடன் விளங்கியபோது அப்பெருமிதத்தினை அடக்கத் திருக்கோவலூரை முற்றுகையிட்டனன். திருமுடிக்காரி போர் வலி படைத்தவன் ஆதலால் அவனும் வீராவேசத்துடன் எதிர்த்தனன். இரு பெரு வீரர்களும் வீரர்களின் படை