பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மா நகரை அரசிருக்கையாகக் கொண்டு அரசாண்ட தொண்டைமான், அதிகமானோடு அமர் புரிய எண்ணங்கொண்டிருப்பதை அஞ்சி அறிந்தனன். “வீணே தன்னொடு பொருது படைவலியும் துணைவலியும் இழந்து தொண்டைமான் மடிவானே; அவனுக்கு நம் ஆற்றல் இன்னது என்பதை அறிவித்தல் நலம்” என்று எண்ணி அதனை அறிவிக்கும் ஆற்றல் சான்றவர் ஔவையாரே என்பதை உணர்ந்து ஒளவை மூதாட்டியாரை அவனிடம் தூது போக்கினன்.

ஔவையாரும் தொண்டைமானுழைத் தூது போயினர். தொண்டைமான் ஔவையாரது புலமையை நன்கு உணர்ந்தவன் ஆதலின், அவ்வம்மையாரை நன் முறையில் வரவேற்று உபசரித்தனன். அடுத்த நாள் தன்படைவலி இத்தகையது என்பதைக் காட்ட எண்ணி, அவனுடைய படைக் கொட்டிலிற்கு அழைத்துச் சென்று காட்டினன். அங்குப் படைகள் யாவும் நன்கு நெய்பூசப்பெற்றுக் கைப்பிடிகள் செவ்வனே செய்யப்பட்டு மாலை அணியப்பட்டு ஒழுங்காக வைக்கப்பட்டிருந்தன. அவற்றைக் கண்ட ஔவையார் “தொண்டைமான் தன் படைப்பெருக்கைக் காட்டவே நம்மை இக்கொடிடிற்கு அழைத்து வந்து காட்டுகின்றனன். இவனுக்கு நன்முறையில் அறிவு புகட்ட வேண்டும்” என்னும் எண்ணமுடையவராய், தொண்டையர் காவல! உன் படைகள் யாவும் போர்முகத்தைக் காணாதனவாய் நல்ல முறையில், செய்தவை செய்தனபோலவே, இக்கொட்டிலில் அலங்காரத்துடன் இருக்கின்றன. ஆனால், அதிகமானிடம் இருக்கும் ஆயுதங்கள் போரில் முனைந்து நின்று