பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொருந்தாதாருடைய உடலில் பாய்ந்து, கூர் மழுங்கிக் காம்பு தளர்ந்து ஆணிகள் அகன்று உள்ளன. அவை மீண்டும் செம்மையுறும் வண்ணம் கொல்லனுடைய உலைக்களத்தில் சென்றுள்ளன” என்று கூறி அதிகமான் போர்ச்சிறப்பைக் கூறாதது போலக் கூறிக் காட்டினர். இதனால், தொண்டைமானைப் போர் முகம் காணாதவன் என்பதைப் புகழ்வது போல இகழ்ந்து, அதிகமானை இகழ்வது போலப் புகழ்ந்து பேசினார். இப்படிப் பேசித் தொண்டைமான் செருக்கையும் அடக்கினர்.


அதிகமானின் இறுதிக் காலம்

முடிசார்ந்த மன்னரும் மற்றும் உள்ளோரும் முடிவில் ஒரு பிடி சாம்பராய் வெந்து மண்ணாவது திண்ணமல்லவா ? அதிகமானின் வாழ்நாள் குறுகி விட்டது. மலையமான் திருமுடிக்காரியும் ஒரு சிறந்த மானி. அவனுக்கோ தன் தகடூரை அதிகமான் கைப்பற்றியது குறித்து வருத்தமாகவே இருந்தது. எப்படியும் அவ்வூரைக் கைப்பற்றச் சமயம் நோக்கிக் கொண்டிருந்தனன். அதன் பொருட்டுச் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை என்பானைத் தனக்குத் துணைசெய்ய வேண்டினன். சேரனும் அவ்வேண்டு கோளுக்கிணங்கினான். அச்சேரனுக்குப் பகைவன் வல்வில் ஓரி. அவனை முதலில் வென்று பின்பு அதிகமானோடு போர்புரியலாம் எனச் சேரன் மலையமானுக்குக் கூறினான். அதற்குக் காரியும் இசைந்தனன். இதையறிந்து வல்வில் ஓரி அதிகமானைத் தனக்குத் துணையாகுமாறு வேண்டினான். அதிகமானும் துணைபுரிவதாக இசைய, பெரும்போர் மூண்டது. இப்போரில் அதிகமானுக்குத் தோல்வியே