பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

65

தார். அவ்வாறே அதிகமானை ஈமத்தில் ஏற்றி எரி மூட்டினர். அப்படி எரித்த காலத்தில் இவன் உடல் அழிந்தது. புகை வானத்தைச் சூழ்ந்தது.

இதைக் கண்ணுற்ற ஒளவையார், “அதிகமான் பொய்யுடல் மாய்ந்தது. என்றாலும், புகழ் உடல் என்றும் மாயாது” என்னும் பொருளில், “திங்கள் அன்ன வெண்குடை ஒண்ஞாயிறு அன்னோன் புகழ் மாயலவே” என்று பாடினர். அதிகமான் பீடு பல எழுதி, நடுகல் அமைத்துப் பராவத் தொடங்கினர். அச்சிலை முன்னர்ப் படையல் போட்டுப் பண்டம் பல வைத்தனர். அவற்றைக் கண்டனர் ஒளவையார். “ஐயோ இவனையின்றி யான் தனித்து வாழும் நாள் இல்லாமல் போவதாக. அதிகமான் நாடு கொடுப்பினும் கொள்ளா இயல்பினன். அத்தகையோன் இப்பொழுது படையல் மூலம் கொடுக்கப்படும் பொருள்களை ஏற்பனோ? ஏற்கான்,” எனவும் பாடி வருந்தினர்.

ஒளவையார் அதிகமானின் பிரிவுக்கு ஆற்றாது அரற்றியதுபோல, அரிசில்கிழாரும் வருந்திப் பாடியுள்ளார். அவர் காலனை நோக்கிக் கடிந்து கூறுகின்றனர். “ஏ கூற்றுவனே! எங்கள் அதிகமானை அழித்தனையே! அவன் ஏழை பங்காளன் அல்லனோ? அவனுடைய பிரிவு எப்போதும் பரிசில்மாக்களுக்கும் இரவலர்களுக்கும் தாயைப் பிரிந்த சேய்கள்போல அன்றோ அமைந்தது. நீ அறக்கடவுள் என்று பெயரைப் பெற்றது இலக்கணத்தில் அமங்கலச் சொற்கள் எல்லாம் மங்கலம் என்று குறிப்பிடப்படுவது போன்றது. வாழ்நாள்