பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

75

வேண்டிய முகிற் குழாங்கள் மலைமீது தவழ்வதாக என்று தெய்வம்பராவி, அங்ஙனமே தாம் வழிபட்டதன் பலனாக மழைவளந் தரவும், மீண்டும் அம்மேகம் பெய்தது சாலும்; மேலே செல்வதாக, என்று கடவுளைப் போற்றும் இயல்புடைய குறமகளிர் குலவி மழையின் பயனால் தினைப்புனம் செழிக்க அத்தினையரிசி யுண்டு வாழ்கின்ற மலை நாட்டு மன்ன!” எனவும், “சினத்தினால் செய்யும் போரையும், கைவண்மையால் கொடுக்கும் கொடையினையும் உடையோனே! என்றும் காற்றினும் கடுகிப் பாயும் கலினமா உடைய மண்ணியோனே எனவும் விளித்து, யான் நின்னை நாடி நின் அகத்தை அடைந்து நின் லையைப் பாடி நின்னையும் வாழ்த்தி நின்றேன். அப்பொழுது ஓர் எழிலுடை யணங்கு நின் பேரைக் கேட்டதும் அகத்தினின்றும் புறத்தே போந்து, நீர் வார்க்கண்ணளாய், குழல் போல இசைக்கும் ஒலியுடன் அழத் தொடங்கினாள். அவளது இரக்க நிலை, மிக மிக உருக்கமான நிலையாக எனக்குத் தென்பட்டது. அவள் யாரோ அறிகிலன். அவள் யாராகிலும் என் ? அவள் உன் பேரைக் கேட்ட அளவில் வாட்டமுற்று அழும் அழுகையளாகக் காணப்படுதலின், உனக்கு நெருங்கிய உறவினளாக இருத்தல் வேண்டும். அவள் உனக்கு நெருங்கிய உறவினளாயினும் சரியே. அன்றிப் புற இனத்தவள் ஆயினும் சரியே. அவளுக்கு நீ தண் நளி செய்யவேண்டுவது உன் தலையாய கடனாகும்” என்று கூறினார். இங்ஙனம் கபிலர் பாடி அறிவுறுத்திய பாடலால், நின்மலையிற் குறவர்மாக்கள் கடவுளைப் பேணி மழை வேண்டியபோது அம்மழையினைப் பெற்றுத் தாம் வேண்டும் உணவினை நுகரு