பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

இல்லின் கண் மழையைக் காணாது வாடிய பயிரினைப் போல் வருந்தி நிற்கின்றாள். அவளிடம் சென்று அவளது அடர்ந்த குழலில் அழகிய மலரைச் சூட்டி மகிழும் பொருட்டு நின் தேரில் பரியினைப் பூட்டி விரைந்து செல்க. இதுவே யான் வேண்டும் பரிசில்” என்று இன்னுரை பகர்ந்தனர். “அருங்கல வெறுக்கை அவைபெறல் வேண்டா, வன்பரி நெடுந்தேர் பூண்கநின் மாவே” என்பது இப்புலவர் வாய்மொழிகள்.

பெருங்குன்றூர்க்கிழாரும் அவர் புகட்டிய பேருரையும்

பெருங் குன்றூர்க்கிழாரும் பரணர் கருத்தையும், அரிசில்கிழார் கருத்தையும் அடியொற்றிப் பாடினர். பெரும் புலவர்களின் கருத்துக்கள் யாவும் ஒரு படித்தாகவே காணப்படும்.

பெருங்குன்றூர்க் கிழாரும் பேகனைக் கண்டு, “ஆவியர் கோவே! யான் நின்மாட்டு வேண்டுவது பொருள் பரிசில் அன்று. நீ நேரே இவண் நின்று நீங்கிக் கண்ணகி வாழும் அவண் சென்று அவட்கு மலர்சூட்டி மகிழ்க. அதுவே யான் வேண்டும் பரிசு. அவள் கூந்தல் தோகை போல் அடர்ந்து மென்மையாகக் காணப்படுவது. அவ்வழகிய குழல் பூசுவன பூசிப் பூண்பன பூண்டு பன்னாள் ஆயது. அதனால், அது பொலிவிழந்து காணப்படுகிறது. அது மீண்டும் பொலிவு பெற நீ அருள் செய்க” என்று வேண்டி நின்றார்.

இங்ஙனம் புலவர்கள் யாவரும் ஒருமனப்பட்டுப் பேகனை அணுகித் தாம் பரிசில் பெறுதலையும்