பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


இறுவாய்

இதுகாறும் கடை எழு வள்ளல்களின் வரலாற்றை ஒழுங்காக உணர்ந்தீர். இவ்வெழுவரும் வள்ளல்களாக மட்டும் இருந்ததோடு இன்றிப் பெரும் வீரர்களாகவும் விளங்கினர் என்பதையும் உணர்ந்துகொண்டீர்கள். இன்னோரன்ன வீரமும் கொடையும் நிறைந்த சிற்றரசர்கள், பேர் அரசர்கள் வரலாறுகள் பல நம் செந்தமிழ் நூல்களில் சிறக்கக் காணப்படுகின்றன. அவை யாவும் பொய்யுரையாகவோ புனைந்துரையாகவோ இன்றி, உள்ளதை உள்ளவாறு உணர்த்தும் வரலாறுகளே யாகும். அவற்றை நீங்கள் ஆராய்ந்து படித்தல் அறிவுடைமையாகும். இம்முன்னோர்களின் உண்மை வரலாறுகளை அறிதற்குப் பெருந்துணை செய்வன சங்கமருவிய நூற்களே யாகும். அவையே திருமுருகாற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல் வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடு கடாம் என்னும் பத்துப் பாட்டும், நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்னும் எட்டுத்தொகையும், நாலடியார் நான்மணிக்கடிகை, கார் நாற்பது, களவழி நாற்பது, இனியது நாற்பது, இன்னா நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, திருக்குறள், திரிகடுகம், ஆசாரக்