பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுத் திருப்பதிகள் 6i பொலிந்து நின்ற, எம்பெருமான் தடங்கண்கள் (திருவிரு. 42) என்று ஒருக்கணித்துக் கடைக்கண்ணால் நோக்கிய திருக் கண்ணழகுடன் காட்சி தந்தவிதத்தையும் பேசுகின்றாள் ஆழ்வார் நாயகி. முகில்வண்ண நிறத்துக்குப் பொருத்தமான வெளுப்பையும் சுரியையும் உடைத்தான திருச்சங்கையும், அங்ஙன் ஒரு விசேடணம் இட்டுச் சொல்ல வேண்டாதபடி யான அழகையுடைத்தான திருவாழியையும் திருச்சங்கையும் ஏந்தியவண்ணம் தாமரைக்கண்கள் பிறழ வந்து பெரிய திருவடித் திருத்தோளில் ஏறிச் சாரிகை வந்து தன் நெஞ்சினுள் உலாவுகின்ற எம்பெருமானைக் காணுமாறு அன்னையார்களை வேண்டுகின்றாள் பராங்குச நாயகி, இவ்விடத்தில் எம்பெருமான் திருமேனிக்குத் திவ்வியாயுதங் கள் பிரகாசமாகத் திகழ்வதுபோல அவனுடைய ஆன்ம குணங்கட்குத் திருக்கண்கள் பிரகாசமாக இருப்பதை எண்ணுகின்றோம். தண்ணீர் தோன்றுவது கண்வசி அல்லவா? என்சொல்லிச் சொல்லுகேன் : என்ன பாசுரமிட்டு எதைச் சொல்வது?’ என்கின்றாள். உங்கள் கண்ணுக்கு இலக்காகாதாப் போலே, என் வாக்குக்கும் இலக்காகிற தில்லையே! என்கின்றாள். புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணt என்று டேசிய பிறகு இன்னமும் பேசவேண்டியது என்ன இருக்கின்றது? என் னில் : “அதைப் பற்றிப் பன்னி உரைக்கில் பாரதமாக வளருமே; அதைச் செய்ய முடிய வில்லையே' என்கின்றாள். இனித் தான் மேற்கொள்ள வேண்டிய காரியத்தைப் பின்னடிகளில் தெரிவிக்கின்றாள். வேத ஒலியும், விழா ஒவியும், பிள்ளைக் குழாம் விடையாட் டொலியும் நிரந்தரமாக நடைபெறுகின்ற திருப்பேரெயி லுக்குச் சென்று சேர்வதே தன்னுடைய பணி என்கின்றாள். - பிள்ளைக்குழாம் விளையாட்டொவி' இத்திருப்பதிக்குச் சிறப்பான தொரு விசேடணம், சிறு பிள்ளைகள் திரண்டு