பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

リ சடகோபன் செந்தமிழ் விளையாடுவதென்பது எங்கும் உண்டு; இவ்வூரில் சந்நிதித் தெரு சற்று விசாலமானது; அங்குப் பிள்ளைகள் விளையாடு வதற்கு வசதி அதிகம். எம்பெருமானும் அந்த விளை யாட்டைக் காண ஆசைப்பட்டானாம், எதிரேயிருந்த பெரிய திருவடியின் சந்நிதி இடைச்சுவராயிருந்தபடியாலே அந்த விளையாட்டைக் காண மறைவாயிருக்கின்றதே என்று வருந்தி கருடா, அப்பால் விவகிப் போ’ என்று பெருமான் ஆணையிட்டானாம். அதன்படி பெரிய திருவடி விலகி நிற்கும் நிலையை இன்றும் காணலாம்.' 8. சிரீவைகுண்டம* : நெல்லை மாவட்டத்திலுள்ள சீவைகுண்ட வட்டத்தின் தலைநகரம். திருக்கோயிலின் '2 நந்தனாருக்காக திருப்புன்கூர் என்ற திருத்தலத்தில் இந்தி விலகி நிற்ப்தை நினைவு கூர வைக்கின்றது. 13. சிரீவைகுண்டம் : சிரீவைகுண்டம் இருப்பூர்தி நிலையத்திவிருந்து ஒரு சில் தொலைவு குதிரை வண்டிகளும் மாட்டு வண்டிகளும் கிடைக்கும். இங்கு எல்லா வசதிகளும் கிடைக்கும். திருநெல்வேலி யிலிருந்து பேருந்துகள் இவ்வூர் வழியே திருச்செந்து ருக்குச் செல்வதால் இந்த வசதியையும் பயன் படுத்திக் கொள்ளலாம். திருக்கோயில் மிகப் பெரியது; சிற்பங்கள் நிறைந்த துண்கள் நிறைந்தது. எம்பெருமான்; சீவைகுந்தன்,கள்ள பிரான், தாயார்: வைகுந்தவல்வி நாச்சியார், சோரநாத நாச்சியார். நின்ற் திருக்கோலம்;தன்னந்தனியாக நிற்கின்றான். கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம். இந்த இருவருக்கும் கன்னி மூலையில் எதிரெதிர்ாகத் தனிக்கோயில்கள் உள்ளன. இந்த எம்பெரு மானுக்கு ஆண்டிற்கு இரண்டு முறை பகலவன் வழிபாடு நடைபெறுகின்றது. சித்திரைத் திங்கள் ஆறாம் நாளும் ஐப்பசித் திங்கள் ஆறாம் நாளும் இளங்கதிரவனின் கிரணங்கள் கோபுர வாயில், மண்டபங்கள் இவற்றையெல்லாம் கடந்து வந்து எம்பெருமானின் திருமேனியை வருடி அதனைப் பொன்னிறமாக்குகின்றன. இத்தகைய் சிறப்பு வேறு எங்கும் இல்ல்ை.