பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 சடகோபன் செந்தமிழ் திருமஞ்சனம் நடைபெற்று வருகின்றது. பாலாழியில் கண் வளரும் பரந்தாமன் பாலாபிஷேகம் பெறுவதும் இதனால் பால் பாண்டியன்’ என்று திருநாமம் சூட்டப் பெறுவதும் பொருத்தம்தானே. வைகுந்த நாதனை நம்மாழ்வார் மட்டிலும் இரண்டு பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார் (9.2 : 4, 8), இந்த இரண்டு பாசுரங்களும் நேரே இவரை மங்களாசாசனம் செய்தவை அல்ல. அண்மையிலுள்ள திருப்புளிங்குடி எம்பெருமானை மங்களாசாசனம் செய்த திருவாய்மொழிப் பதிகத்தில் இந்த இரண்டு பாசுரங்களும் வருகின்றன. ஒரு பரசுரத்தில் திருவைகுந்தத்துள்ளாய் தேவா!' (8) என்ற தொடர் மட்டிலுமே வருகின்றது. மற்றொரு பாசுரம், வைகுந்தத்துள் கின்று (4) என்ற தொடர் மட்டிலுமே இந்த எம்பெருமானைக் குறிக்கின்றது. இந்த இரண்டு பாசுரங்களாலும் அர்ச்சாவதாரமாக எல்லாத் திருப்பதி களிலும் எல்லாத் திருக்கோலங்களிலும் எழுந்தருளி யிருப்பவன் பரமபத நாதனே என்ற தத்துவம் குறிப்பாகப் புலப்படுத்தப் பெற்றுள்ளது. பொதுவாக அர்ச்சை வடிவில் உள்ள எம்பெருமான் சில தலங்களில் சயனித்திருப்பான்: சிலவற்றில் இருந்த திருக்கோலத்தில் சேவை சாதிப்பான்: இன்னும் சிலவற்றில் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருவான், ஆழ்வார்கள் இந்த மூன்று திருக்கோலங்களில் எம்பெருமானைத் தனித்தனியே அநுபவித்து மகிழ்வர், இந்தத் திருக்கோலங்கள் மூன்றையும் ஒருசேர சேர்த்தும் அவர்கள் அநுபவித்துக் களிப்பர். திருமழிசையாழ்வார் “நின்ற தெந்தை' (திருச்சந். 64) என்ற பாசுரத்திலும், திருமங்கையாழ்வார் கல்லுயர்ந்த (திருநெடுந் 15) என்ற பாசுரத்திலும், நம்மாழ்வார், கின்ற வாறும் இருந்த வாறும் கிடந்த வர்றும் நினைப்பரியன் -திருவாய் 5.10 : 6